Saturday, March 10, 2012

எங்கேயப்பா இறைவன் ?

எங்கேயப்பா இறைவன் ?
 
 
யாசகம் என்பதே பிச்சைக்காரியின்
 
வாசகம் - அந்த வாசகம் தான்
 
இறைவனுக்கு யாசகமோ ?
 
இல்லையென்றால் ஏன் இந்த படைப்பு ?
 
 
 
நாம்
 
ஆண்டவனை நினைத்து அழுததைவிட
 
அவள் அதிகமாக அழுதிருப்பாள் - 
 
இருந்தும் ஆண்டவன் அவளருகினில்
 
மருந்தளவில் கூட வராதது ஏன் ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
அழுக்கு ஒரு காரணம் என்றால்
 
உலகமே ஒரு அழுக்கு உருண்டை தானப்பா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
இழுக்கு ஒரு காரணம் என்றால்
 
இறைவன் ஏனப்பா  ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
முன் வினைப் பலனா ? இல்லை
 
தன் வினைப் பயனா ?
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
சிலர் பிச்சைக்காக அழுகிறார்கள்
 
பலர் இச்சைக்காக அழுகிறார்கள்
 
அழுகுரல் மட்டுமே வேறுபாடு . . .
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
பாவம் செய்வது மனிதன் மட்டும் தானா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
உருவம் இல்லாதவனுக்குத் தான் எத்தனை
 
உருவமப்பா ? அத்தனை உருவமும் அடங்கி இருப்பது எந்த
 
துருவமப்பா ? 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கண்ணுக்கு அருகில் புருவம் இருந்த போதும்
 
கண் புருவத்தை பார்த்ததுண்டா ?
 
இறைவனும் புருவத்தைப் போலவா ?
 
இருந்தால் மற்றவர் பார்த்து இருக்க கூடுமே ?
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
ஆத்திகத்தில் இருந்த போது அகப்படவில்லையே
 
ஆண்டவனும் கூட . . .
 
நாத்திகத்தில் இருந்து நகன்ற போது
 
நல்லதும் நலிந்ததும் தெரிந்ததடா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கேள்விகளால் நிறைந்த மஞ்சமே இவ்வுலகம் . . .
 
இதில் எல்லா கேள்விகளுக்கும் பதில்
 
கேள்வியின் பக்கத்திலே இல்லையப்பா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
நீ எந்த கேள்வியைத் தொடுகிறாய் என்பதே
 
இன்றைய கேள்வி ?
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கேள்விக்கும் பதிலுக்கும் தூரமப்பா
 
கேள்விகள் இறைவனுக்குப் பாரமப்பா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
இறைவன் இருப்பது ?
 
உணவுக்கு பின்னாலா ?
 
உணர்வுக்கு முன்னாலா ?
 
 
 
கனவுக்கு பின்னாலா ?
 
கற்பனைக்கு முன்னாலா ?
 
 
 
வினாவுக்கு பின்னாலா ?
 
வினவுவதற்கு முன்னாலா ?
 
 
 
உலகத்தின் பின்னாலா ?
 
கலகத்தின் முன்னாலா ?
 
 
 
அசைவுகளுக்கு பின்னாலா ?
 
ஆசைகளுக்கு முன்னாலா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
இறைவன் இருப்பது உண்மையென்றால்
 
அன்னையைப் படைத்தது எதனாலே ?
 
அவளுக்கும்
 
ஆசையைக் கொடுத்தது எதனாலே ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் . . .
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
புரிந்தவர்களின் பதில் தேவை இல்லையப்பா . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கேள்வியாய்  இருப்பவனே இறைவன் . . .

2 comments:

  1. இறகுகள் உதிர்வது பறவையின் வளர்ச்சிக்காகவே...

    ReplyDelete
  2. தமிழனை வாழ்த்தும் ஓர் தமிழன்....

    ReplyDelete