Tuesday, March 13, 2012

விலை நிலங்கள்..​.

வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி வீடுகட்டியும்

கயிற்றின் மேலே நடப்பதைப் போலே மக்கள்

சோற்றுக்குப் பஞ்சமும் கையேந்தும் நிலையும் 

நேற்றுக்கும் இன்று விலைவாசிக்கும் பசிக்குப்

படியளக்க ஒருநாளில் கதியிழந்த மாக்களாய்

குடியிழக்க விதியளக்கும் எதிர்காலம் வரலாம்...




தனவான்கள் கூட ஒரு நாளில் சோறுகண்ட

கனவான்களாய் மாறும் நிலையும் சேறுகண்ட

உழவர்கள் மட்டுமே பின்னாளில்  வீறுகொண்ட

உழவும் கிட்டும் தனவானாகும் நிலையும் வரும்...




தாயாகிய தங்களது நிலந்தனை நிந்தனைக்குடன்பட்டு    

சேயாகிய மகள் புகுந்தவீடு செல்லும் நினைவினிலும்  

அள்ளி வழங்கிய பாசத்திற்கு விலையாக கண்ணீரைத்

தள்ளியும் தன் கடனைக் கழிக்கின்றனர் விவசாயிகள்...




எழுதும் கோல் உள்ளவன்  கூட எதிர்காலத்தில்

உழுதுண்டு பின் செல்ல நேரிடும் உணவுண்டு

பழுதின்றி வாழ வழியொன்று தானென்று

தொழுதுண்டு உழவை அவனும் மதித்திடுவான்...



களவுக்கும் வழியுண்டு பிற்கால நிலையில்

நிலவுக்கும் வழிகண்டு தற்கால நிலையை

விழலுக்கு இறைத்த நீராய் எதிர்காலமும்

உழவுக்குப் பின்வந்து நிற்குமன்றோ?



விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி இந்நாளில்

அவசியமான உழவுத் தொழிலின் நலம்கெடவே

அனைவருக்கும் பசிதீர்க்கும் அட்சயப் பாத்திரமும்

அனைவரும் யாசிக்கும் பிச்சைப் பாத்திரமாகுமோ?

No comments:

Post a Comment