Wednesday, March 14, 2012

ஏதோ சிந்தனை...

கண்ணாடி தனது பிம்பத்தை தவிர
 
மற்ற பிம்பங்களையே  காட்டும் . . .
 
அது தனது பிம்பத்தைக் காட்டுவதற்கு
 
இன்னொரு கண்ணாடி தேவைப்படுகிறது . . .
 
 
ஆனால் பெண் எப்போதும் தன்னை
 
காட்டுவதிலேயே அதிகம் கவனம்
 
எடுத்துக் கொள்கிறார்கள் . . .
 
 
பெண்
 
கண்ணாடியின் எதிர் வினையோ ?
 
கவனமாக கையாள வேண்டியது
 
கண்ணாடி மட்டுமல்ல
 
பெண்ணும் தான் . . .
 
கல்லைக் கூட மெதுவாக வைக்கலாம்
 
கண்ணாடியின் மீது - ஆனால்
 
வேகம் விவேகத்திற்கு அழகல்ல,
 
விளக்கம் விபரீதத்திற்கு அழகல்ல . . .
 
 
 
இரு புறமும் தெரிகின்ற
 
கண்ணாடியை இருந்த நான்
 
காதலெனும் ரசம் பூசிக் கொண்டதால்
 
என்னை நானே பார்த்து கொள்கிறேன் . . .
 
அதில் இத்தனை நாளில் இல்லாததொரு
 
இனிமையைக் காண்கிறேன் . . .
 
 
இளமைத் தடம் மாறுவதும்
 
இனிமை தடுமாறுவதும்
 
இங்கு தானோ ?
 
 
நடந்து வந்த பாதச் சுவடுகளை
 
நான் இரவிலே தேடிக் கொண்டிருக்கிறேன் 
 
தொலைத்த சோம்பலைச்
 
சுறுசுறுப்புடன் தேடும் எறும்புகளை போல. . .

No comments:

Post a Comment