Wednesday, March 14, 2012

அருள் வேண்டி...

ஒரு புறம் பார்த்தே என்னவளுடைய
 
இரு விழிகளின் சாலையைக் கடந்ததாலே
 
மறுபக்கம் நானும் பார்க்க மறந்து போனது . . . 
 
 
 
அந்நிலவின்
 
ஒருபக்கம் ஒளி இருந்தாலும் - மறைந்து இருக்கும்
 
மறுபக்கம் இருள் தானே - அவளும் மறைத்து இருக்கும்
 
மறுபக்கம் அருள்வாளா ? 
 
 
 
இல்லையென்றால்
 
திரண்டு இருக்கும் என்னுடைய ஒருபக்க எண்ணங்களில்
 
புரண்டு இருக்கும் அவளின் மறுபக்க நினைவுகளைக் 
 
கண்டு மிரள்வேனோ ?
 
 
 
தொல்லையென்றால்  
 
விரிந்து இருக்கும் அவளது அழகின் எல்லையில் சுடர்விடத்
 
திரிந்து இருக்கும் இடைவெளியில் நெய்விட்டு நெடுநேரம்
 
எரிந்து சுருள்வேனா ?
 
 
 
பிடியில்லா வானத்தைப் போல நானும் தேடித்
 
பிடிக்கின்ற நிலவாக வருவாளோ ?
 
 
 
கொடியில்லா மலரைப் போல அவளும் படரத்  
 
துடிக்கின்ற  மடிமேலே வருவாளோ ?
 
 
 
உரையில்லா என் உள்ளக் குறிப்பிற்கு முன்
 
உரையாகும் உணர்வுகளாக வருவாளோ ?
 
 
 
கரையில்லா இன்பக்கடல் நீந்த என் இளமைக்
 
கரையேறும் தோணியாக வருவாளோ ?

No comments:

Post a Comment