Saturday, March 10, 2012

புலம்பும் சிலம்பம்...

என்னவளே

உன்னிடத்தில்

எந்த இடத்தில குறை உள்ளது

என்று நான் எப்படி கூறுவேன் ?


நான் "அந்த" மடத்தை

நாடி உறங்கும் போது . . .

"ஆ" னாக்க "அந்த" மடம்

ஆகாட்டி சந்த மடம்

இன்பம் என்று வந்த மடம்!

இழந்த பின்னே எந்த மடம்?

ஈரம் காய்ந்த "அந்த" இடம்

ஈடாகுமோ என் "சொந்த" மடம் . . .


வீடாள மறந்து நானும் கன்னியின்

காடாளச் சென்றதாலே எந்தன் 

பெண்டாளை விட்டு விட்டு "அந்த"

சண்டாளைச் சரண் அடைந்தேன் . . .


அடைந்தது போகமெனும்  பாற்கடலிலே  


கடைந்தது அமுதமென எடுத்துப் பருகியபின்

உடைந்தது கலசம் மட்டுமல்ல என்னுடைய

"மடை" திறந்த "கவனமும்" தான் . . .


நடனம் என்று நம்பி வந்து நாளும் "அந்த"

கடன்பட்டு நளினத்திலே நானும் "அங்கே"

உடன்பட்டு ஊடகத்திலே தான் மிதந்து மதி

இடமாறிய நாடகத்தை ஏன் மறந்தேனோ ?



நான் மறந்ததை கவிபெருமகனாம்,

இளங்கோ எடுத்துரைத்தான் - எல்லோருக்கும்

விளங்க தொடுத்துரைத்தான் - அது தானே

சிலப்பதிகாரம் எனும் காப்பியமாகி அதிலே

கலப்பதிகாரம் கூடாதென கண்டு சொல்ல

கண்ணகியை நாயகியாக்கி என்னுடைய

கண்ணெதிரே மாதவியைத் தூது விட்டான் . . .



மாதவியும் தூது வந்தாள்

மாதவனின் சூது கண்டாள்

மாவிலையின் தோரணத்தில்

பூவிலையின் காரணத்தால்

மேவியவள் மையல் கொண்டாள்

மேதினியைத் தான் மறந்தாள் . . .


கண்ணகியும் கண்டு கொண்டாள் -  இந்தப்

பெண்ணிடத்தில் என்ன இல்லையென

தன்னிடத்தைத் துறந்து தலைவனும்
 
சென்றதன் காரியத்தை உணரவைத்து

கணிகைமடி சொர்க்கமென கிடந்தவனை

வணிகம் செய்ய அனுப்பி வைத்தாள் . . .


வணிகம் செய்யச் சென்றவனை

வஞ்சித்தவன் பாண்டியன் என்ற

வினயம் கண்டு விளக்கம் கூற 

விதுரனிடம் சிலம்புடன் சென்று

நீதி கேட்டுப் போராடி கோபத்தணல் 

நீறு பூத்த நெருப்பாக தன் இடது

நெஞ்சம்தனில் தோன்றிடவே

வஞ்சியவள் வென்று வந்தாள்

மதுரையைக் கண்ணகியாய் . . .


 
(பூவிலை - விலைமகள் பெறும்  அற்றைப் பரிசம், வினயம் - சூழ்ச்சி, விதுரன் - கள்வன்)

No comments:

Post a Comment