Tuesday, March 13, 2012

இதைத் தான் விதியென்பதா?

அதிர்ஷ்டம் அழைத்தது

அதன் பின்னாலே

துரதிர்ஷ்டமும் துரத்துகிறதே

எதனாலே ?

இதைத் தான் விதியென்பதா ? - நான்

இழந்து விட்ட மதியென்பதா  ?



தோலறுந்த  காலணியை நான் எடுத்துத் தைக்கும் முன்னே

நூலறுந்த கதையை என்னவென்பேன் ?



அரச மரத்தை சுற்றி

அடி வயிற்றைத் தொட்டு பார்த்தவளுக்கு

அதிர்ச்சி !  அவள் கணவன் போன இடம் எங்கே ?



விதவையின் கனவில் மணக்கோலம் -

விழித்தவுடன்  கணவனைக் காணவில்லை?

காலப் பிழையில் அவள் நிலை...

ஆயிரம் துளிகளைத் தடுக்கின்றது -

அவள் ஏந்துகின்ற குடை -

ஆயினும்  ஒற்றைத் துளியாவது

அவள் மார்தொட நினைக்கின்றது -

அதனால் தான் அடைமழையோ ?



அடைமழை பெய்யும் போது

அவள் என்ன செய்வாள் ? -

குடை கூட என்ன செய்யும்

குற்றத்திற்கு உடன்படுவதைத் தவிர . . .




மார்தொட்ட ஒரு துளி கால் தொட நினைத்து

மயங்கி விழுந்து இடையில் காணாமல் போனதெங்கே ?




மார்பினில் விழுந்த நெகிழ்ச்சியில் அவள்

மானம் நனைத்து விட்டு உடையில் கைதியானதோ ?

மார் தழுவிய மகிழ்ச்சியில் இடையின் அலங்காரத்

தேர் அசையும் சிறு நடையில் காலாவதியானதோ ?



மண்ணில் விழுகின்ற மழைத்  

துளியும் எழுவது எதனாலே ?

பெண்ணைத் தழுவப் பெருமிதக்

களிப்போடு எழுவது பிழைக்காக . . . 
 

ஆம் பெண் அழகை பேரழகாய்

மிகைப்படுத்துவது  நீரென்றால் - அதனை

வகைப்படுத்துவது காற்றாகும் . . .

மணமேடை...

நான் நாயகனாக நிற்காத மேடை

ரசிகனாய், வாசகனாய் நின்ற மேடை

பலர்கூடி ஆசியுடன் விளங்கிய மேடை

இருவர்கூடி வாழ நேசம் வழங்கிய மேடை



கனவும் நினைவாக உலகம் கொடுத்த மேடை

களவும் கற்று மறக்க கற்றுக் கொடுத்த மேடை

மனமகிழ ஆசையின் ஆரம் தொடுத்த மேடை 

மஞ்சத்தில் கொஞ்ச நெஞ்சம் தொடுத்த மேடை



பாவாடைப் பருவத்திற்கும் பூவாடை கொடுத்த மேடை

தாவணியின் உருவத்திற்கும் சேலைத் தொடுத்த மேடை

சேலையின் தலைப்பிற்கும் ஆவலைக் கொடுத்த மேடை

சேர்ந்து வரும் கலைகளுக்கும் அவளைத் தொடுத்த மேடை...




மேதைகள் முட்டாளாவதும்

முட்டாள்கள் மேதையாவதும்

இந்த மேடையில் தான்...


பேதைகள் ஞானியாவதும்

பாதைதேடி  தேனீயாவதும்  

இந்த மேடையில் தான்...



சேவைகள் தேவையாவதும்

தேவைகள் சேவையாவதும் 

இந்த மேடையில் தான்...



ஆய்வும் ஓய்வு தேடுவதும்

ஓய்வில் ஆய்வு தேடுவதும்

இந்த மேடையால் தான்...



சேலைகள் சோலையாவதும்  

மாலைகள் வேலையாவதும்

இந்த மேடையில் தான்...



கனவுகள் நினைவாவதும்

நினைவுகள் கனவாவதும்  

இந்த மேடையால் தான்...



ஒருமை பெருமையாவதும்

பெருமை ஒருமையாவதும்

இந்த மேடையால் தான்...



மனசாட்சி காட்சியாவதும்

மணக்காட்சி சாட்சியாவதும்

இந்த மேடையில் தான்...



விதியும் மதியளப்பதும்    

மதியும் விதியளப்பதும் 

இந்த மேடையில் தான்...



மணமகள் படியளப்பதும்

மணமகன் மடியளப்பதும் 

இந்த மேடையால் தான்...



ஆடை அலங்காரமாய் கட்டி வந்த மேடை

ஆசை இலங்காரமாய் ஒட்டி வந்த வாடை

கூடைப் பூக்கோலமாய் கொட்டி அளக்கும் பாவை

கூடும்  மாக்கோலமாய் மெட்டி விளக்கும் சேவை...



இலங்காரமாய் - இலங்கு + ஆரமாய் (விளங்கும் ஆரமாய்)  

Monday, March 12, 2012

மது மயக்கம்...

உதட்டின் வழி ஊர்ந்து செல்லும் உல்லாசம்

உள்ளே சென்றவுடன் மயக்குமதன் சல்லாபம்

பிதற்றுவதும் அதனுள்ளே ஆடி அடங்குவதும்

பின்னலெனத் தொடரச்சொல்லும்  மது மயக்கம்...





கள்ளருந்திய வாயமுதமெனக் காட்டும் மயக்கமதில்

உள்ளருந்திய விருந்தெனவே உணர்வுகளும் எழுந்து

உள்ளரும்பிய ஊக்கமது கூட்டும் உலகமதில் விழுந்து

கள்ளரும்பிய பூக்களாய் மனமும் மாறிவிடும்...





உணர்வாய் மாறுவது மாதுவின் மயக்கமென்றால் - அந்த

உணர்வை மீறுவது ம்துவின் இயக்கமன்றோ!


நினைவைக் கொடுக்க மாதுவும் தயங்கி நின்றால் - அந்த

நினைவைக் கொடுப்பதும் ம்துவின் இயக்கமன்றோ! 





கவலைக்கு மருந்தாக உட்கொள்ளக்

கண்கண்ட விருந்தாகும் மது மயக்கம்...


அவளுக்கு இணையாக தொட்டுக்கொண்டால்

அவதியைக் கொடுப்பதும் மது மயக்கம்...


மறந்த நினைவுகளையும் அகழ்வாய்ந்து

திறந்து காட்டுவதும் மது மயக்கம்...


பிறந்த பிறவிக்கும் புகழ்சேர்க்கச் 

சிறந்து விளங்குவதும் மது மயக்கம்...

பெண்ணுரை...

Kd;DiuahdJ ngz;zpd; gpwg;G
KfTiuahdJ kz;zpd; rpwg;G
kjpg;GiuahdJ nghd;dpwNktpa cly;
gjpg;GiuahdJ Gd;difapd; vopy;
mzpe;JiuahdJ tpopAk; nkhopAk;
Ma;TiuahdJ Jbg;Gk; ebg;Gk;
ghpe;JiuahdJ FzKk; kdKk;
tphpTiuahdJ FoYk; ,ikAk;
GfOiuahdJ ,ilAk; eilAk;
rpwg;GiuahdJ ehzKk; khdKk;
mwpTiuahdJ kaf;fKk; jaf;fKk;
nghUSiuahdJ epjk;gKk; jdKk;
fUj;JiuahdJ ngz;ikAk jha;ikAk;;
epiwTiuahdJ Kj;jKk; nkhj;jKk;

Saturday, March 10, 2012

புலம்பும் சிலம்பம்...

என்னவளே

உன்னிடத்தில்

எந்த இடத்தில குறை உள்ளது

என்று நான் எப்படி கூறுவேன் ?


நான் "அந்த" மடத்தை

நாடி உறங்கும் போது . . .

"ஆ" னாக்க "அந்த" மடம்

ஆகாட்டி சந்த மடம்

இன்பம் என்று வந்த மடம்!

இழந்த பின்னே எந்த மடம்?

ஈரம் காய்ந்த "அந்த" இடம்

ஈடாகுமோ என் "சொந்த" மடம் . . .


வீடாள மறந்து நானும் கன்னியின்

காடாளச் சென்றதாலே எந்தன் 

பெண்டாளை விட்டு விட்டு "அந்த"

சண்டாளைச் சரண் அடைந்தேன் . . .


அடைந்தது போகமெனும்  பாற்கடலிலே  


கடைந்தது அமுதமென எடுத்துப் பருகியபின்

உடைந்தது கலசம் மட்டுமல்ல என்னுடைய

"மடை" திறந்த "கவனமும்" தான் . . .


நடனம் என்று நம்பி வந்து நாளும் "அந்த"

கடன்பட்டு நளினத்திலே நானும் "அங்கே"

உடன்பட்டு ஊடகத்திலே தான் மிதந்து மதி

இடமாறிய நாடகத்தை ஏன் மறந்தேனோ ?



நான் மறந்ததை கவிபெருமகனாம்,

இளங்கோ எடுத்துரைத்தான் - எல்லோருக்கும்

விளங்க தொடுத்துரைத்தான் - அது தானே

சிலப்பதிகாரம் எனும் காப்பியமாகி அதிலே

கலப்பதிகாரம் கூடாதென கண்டு சொல்ல

கண்ணகியை நாயகியாக்கி என்னுடைய

கண்ணெதிரே மாதவியைத் தூது விட்டான் . . .



மாதவியும் தூது வந்தாள்

மாதவனின் சூது கண்டாள்

மாவிலையின் தோரணத்தில்

பூவிலையின் காரணத்தால்

மேவியவள் மையல் கொண்டாள்

மேதினியைத் தான் மறந்தாள் . . .


கண்ணகியும் கண்டு கொண்டாள் -  இந்தப்

பெண்ணிடத்தில் என்ன இல்லையென

தன்னிடத்தைத் துறந்து தலைவனும்
 
சென்றதன் காரியத்தை உணரவைத்து

கணிகைமடி சொர்க்கமென கிடந்தவனை

வணிகம் செய்ய அனுப்பி வைத்தாள் . . .


வணிகம் செய்யச் சென்றவனை

வஞ்சித்தவன் பாண்டியன் என்ற

வினயம் கண்டு விளக்கம் கூற 

விதுரனிடம் சிலம்புடன் சென்று

நீதி கேட்டுப் போராடி கோபத்தணல் 

நீறு பூத்த நெருப்பாக தன் இடது

நெஞ்சம்தனில் தோன்றிடவே

வஞ்சியவள் வென்று வந்தாள்

மதுரையைக் கண்ணகியாய் . . .


 
(பூவிலை - விலைமகள் பெறும்  அற்றைப் பரிசம், வினயம் - சூழ்ச்சி, விதுரன் - கள்வன்)

எங்கேயப்பா இறைவன் ?

எங்கேயப்பா இறைவன் ?
 
 
யாசகம் என்பதே பிச்சைக்காரியின்
 
வாசகம் - அந்த வாசகம் தான்
 
இறைவனுக்கு யாசகமோ ?
 
இல்லையென்றால் ஏன் இந்த படைப்பு ?
 
 
 
நாம்
 
ஆண்டவனை நினைத்து அழுததைவிட
 
அவள் அதிகமாக அழுதிருப்பாள் - 
 
இருந்தும் ஆண்டவன் அவளருகினில்
 
மருந்தளவில் கூட வராதது ஏன் ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
அழுக்கு ஒரு காரணம் என்றால்
 
உலகமே ஒரு அழுக்கு உருண்டை தானப்பா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
இழுக்கு ஒரு காரணம் என்றால்
 
இறைவன் ஏனப்பா  ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
முன் வினைப் பலனா ? இல்லை
 
தன் வினைப் பயனா ?
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
சிலர் பிச்சைக்காக அழுகிறார்கள்
 
பலர் இச்சைக்காக அழுகிறார்கள்
 
அழுகுரல் மட்டுமே வேறுபாடு . . .
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
பாவம் செய்வது மனிதன் மட்டும் தானா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
உருவம் இல்லாதவனுக்குத் தான் எத்தனை
 
உருவமப்பா ? அத்தனை உருவமும் அடங்கி இருப்பது எந்த
 
துருவமப்பா ? 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கண்ணுக்கு அருகில் புருவம் இருந்த போதும்
 
கண் புருவத்தை பார்த்ததுண்டா ?
 
இறைவனும் புருவத்தைப் போலவா ?
 
இருந்தால் மற்றவர் பார்த்து இருக்க கூடுமே ?
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
ஆத்திகத்தில் இருந்த போது அகப்படவில்லையே
 
ஆண்டவனும் கூட . . .
 
நாத்திகத்தில் இருந்து நகன்ற போது
 
நல்லதும் நலிந்ததும் தெரிந்ததடா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கேள்விகளால் நிறைந்த மஞ்சமே இவ்வுலகம் . . .
 
இதில் எல்லா கேள்விகளுக்கும் பதில்
 
கேள்வியின் பக்கத்திலே இல்லையப்பா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
நீ எந்த கேள்வியைத் தொடுகிறாய் என்பதே
 
இன்றைய கேள்வி ?
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
கேள்விக்கும் பதிலுக்கும் தூரமப்பா
 
கேள்விகள் இறைவனுக்குப் பாரமப்பா . . .
 
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
இறைவன் இருப்பது ?
 
உணவுக்கு பின்னாலா ?
 
உணர்வுக்கு முன்னாலா ?
 
 
 
கனவுக்கு பின்னாலா ?
 
கற்பனைக்கு முன்னாலா ?
 
 
 
வினாவுக்கு பின்னாலா ?
 
வினவுவதற்கு முன்னாலா ?
 
 
 
உலகத்தின் பின்னாலா ?
 
கலகத்தின் முன்னாலா ?
 
 
 
அசைவுகளுக்கு பின்னாலா ?
 
ஆசைகளுக்கு முன்னாலா ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
இறைவன் இருப்பது உண்மையென்றால்
 
அன்னையைப் படைத்தது எதனாலே ?
 
அவளுக்கும்
 
ஆசையைக் கொடுத்தது எதனாலே ?
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் . . .
 
 
 
எங்கேயப்பா இறைவன் ?
 
 
 
புரிந்தவர்களின் பதில் தேவை இல்லையப்பா . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கேள்வியாய்  இருப்பவனே இறைவன் . . .